உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 5ம் தேதி கொடியேற்றத்துடன் மிக பிரமாண்ட முறையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மிக முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஏப்ரல் 16ம் தேதி நடைபெறுகிறது.
இதற்காக வைகை அணையில் இருந்து இன்று ஏப்ரல் 11 மாலை 6 மணி முதல் தண்ணீர் திறப்பதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி முதல் இரண்டு நாட்களுக்கு வினாடிக்கு 750 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு, அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாக குறைக்கப்படுகிறது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டதால் விழா மிக விமர்சையாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Daily Thanthi