விவசாயிகளை ஏமாற்றும் மு.க.ஸ்டாலினின் முரண்பாடு: சமூக ஊடகங்களில் தமிழக விவசாயிகள் கண்டனம் .!

விவசாயிகளை ஏமாற்றும் மு.க.ஸ்டாலினின் முரண்பாடு: சமூக ஊடகங்களில் தமிழக விவசாயிகள் கண்டனம் .!

Update: 2020-12-08 11:01 GMT

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக விவசாயிகளை தவறாக வழி நடத்துகிறார் என்றும், முரண்பாடாக அவருடைய நடவடிக்கைகள் இருப்பதாகவும் விவசாயிகள் அவர் மீது புகார் கூறி வருகின்றனர். மேலும் அவரின் பொய்யான முகத்திரையை ஆதாரங்களுடன் சமூக ஊடகங்களில் கிழித்துள்ளனர். 

கடந்த 2016ல் நடந்த சட்டசபை தேர்தலையொட்டி தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 23 ஆம் பக்கத்தில் வேளாண் பொருட்களை சந்தைப்படுத்த புதிய கொள்கை உருவாக்கப்படும். இதன் அடிப்படையில் தமிழக வேளாண் உற்பத்திப் பொருட்களை இந்திய மற்றும் சர்வதேச அளவில் சந்தைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது..

மேலும் விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி சந்தை விலைக்கு ஏற்ப விற்பனை செய்து பயன்பெற வேண்டும் என்றும், இதற்கு உதவும் வகையில் உற்பத்தியாளரையும் வாங்குவபரையும் இணைக்க அரசும் உற்பத்தியாளர்களும் இணைந்து நிர்வகிக்கும் வேளாண் விளைபொருள் பரிவர்த்தனை அமைப்பு உருவாக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மத்திய வேளாண் சட்டங்களிலும் இந்த கருத்துக்கள்தான் முக்கியமாக இடம் பெற்றுள்ளன.  அப்படி என்றால் தி.மு.க.வின் விருப்பத்தையும்,  அந்த கோரிக்கையையும்தான் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களில் உள்ளது. 

இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராகவும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தி.மு.க. கறுப்புக் கொடி போராட்டம் நடத்தியதும், தேசிய அளவில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு அளிப்பதும் முரண்பாடாக உள்ளதாக  என சமூக வலைதளங்களில் ஆதாரங்களுடன் செய்திகள் பரவி வருகிறது. 

இதை அறிந்த பல தமிழக விவசாயிகள் தங்களை தி.மு.க. ஏமாற்றிவருவதாகவும், மத்திய அரசுக்கு எதிராக தங்களை திரும்ப வைத்து அரசியல் செய்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர்.

வேண்டுமென்றே வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு எனக்கூறி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளை ஏமாற்றுகிறாரா எனக் கேட்டு தமிழக விவசாயிகள் பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருவதாக செய்திகள் வந்துள்ளன.  
 

Similar News