அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட அதிகாரியைப் பணியிட மாற்றம் செய்த தமிழக காவல்துறை!
தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசியலில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் என் மண் என் மக்கள் நடை பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நடை பயணம் தற்போது மூன்றாவது கட்டத்தை எட்டி கொங்கு மண்டலத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு அண்ணாமலைக்கு கொடுக்கப்படும் வரவேற்புகள் இதுவரை காணாத அளவிற்கு மிகுந்த ஆரவாரத்துடன் நடைபெறுகிறது. அதுமட்டுமல்லாமல் இரவு நேரம் என்று பாராமல் பெண்கள் குழந்தைகள் முண்டியடித்து அண்ணாமலை பார்ப்பதற்காக குவிந்திருக்கும் காட்சிகளை இணையதளங்களில் பார்க்க முடிகிறது, மேலும் பெண்கள் குழந்தைகள் தவிர அண்ணாமலையை பார்க்கும் காவல்துறை அதிகாரிகள், சீருடை பணியாளர்கள் சிலர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். அதாவது அண்ணாமலை ஒன்பது வருடமாக ஐபிஎஸ் பணியில் இருந்து உள்ளார், இதனால் அவருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் ஒரு இணை புரியாத பற்று இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ஊட்டியில் தனது நடை பயணத்தை மேற்கொண்ட அண்ணாமலையுடன் ஹில் காப் காவலர் கணேசன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார், தற்போது அவரை ஆயுதப்படைக்கு மாற்றி காவல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.