சனாதன தர்மத்திலோ இந்து தர்மத்திலோ இதுபோன்று இல்லை! தமிழக ஆளுநரின் பரபர பேச்சு!

Update: 2023-10-05 03:18 GMT

தமிழ் சேவா சங்கம் சார்பில் கடலூர் மாவட்டம் மா. ஆதனூர் கிராமத்தில் இன்று திருநாளைபோவார் நாயன்மார் என்ற நந்தனார் குருபூஜை விழா நடைபெற்றது இந்த குரு பூஜையில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கலந்து கொண்டு பேசினார், அதில் ஒரு சமுதாயத்தின் மீது தொடர்ந்து சாதிய கொடுமைகள் நடந்து கொண்டிருந்தால் நம்மால் தலைநிமிர்ந்து வாழ முடியாது, அதோடு நீங்கள் வேறு நான் வேறு என்று கூறினாலும் அதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது!

பிரிவுகள் அனைத்தையும் மறந்து ஒன்றாக வாழ வேண்டும் என்பதிலே நமது நாட்டின் பிரதமர் கவனம் செலுத்தி நாட்டு மக்கள் அனைவரையும் ஒரு குடும்பமாக நடத்தி வருகிறார். ஆனால் மறுபுறம் இதே நாட்டு மக்களை மத ரீதியாகவும் சாதி ரீதியாகவும் பிரித்து வைக்கும் அரசியலும் நடந்து வருகிறது. வன்கொடுமைகளில் குற்றம் புரிபவர்கள் 100 பேரில் 7 சதவிகித பேரே தண்டனை பெறுகின்றனர். அந்த அளவிற்கு ஜாதியை வன்கொடுமைகள் மோசமாகி சென்று கொண்டிருக்கிறது! வேதங்களில் நம்மில் யாரும் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவரோ கிடையாது என்றும் அனைவரும் சமமானவர்கள் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் தமிழகத்தில் தற்போது நடந்து வரும் ஒவ்வொரு நிகழ்வுகளை கேட்கும் போதெல்லாம் மிகவும் வேதனையாக உள்ளது. அதோடு பொருளாதாரம் மற்றும் ஒற்றுமையில் பாகுபாடுகள் என அனைத்தும் அரசியலாக்கப்பட்டு வருகிறது, இந்த மாதிரி செயல்கள் எதுவும் எங்களுடைய சனாதன தர்மத்திலோ அல்லது இந்து மத தர்மத்திலோ இல்லை என்று தெரிவித்துள்ளார். 

Source - The Hindu tamilthisai 

Similar News