விருத்தகிரீஸ்வரர் கோயில் இடத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 12 கடைகள் அகற்றம்!

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை சுற்றிலும் பல ஆக்கிரமிப்புகள் இருக்கிறது. அது மட்டுமின்றி சன்னதி வீதியில் கோயில் முகப்பின் கலை அழகை பாதிக்கின்ற வகையில் 12 பேர் கடையை கட்டி ஆக்கிரமித்துள்ளனர்.

Update: 2021-11-27 06:18 GMT

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை சுற்றிலும் பல ஆக்கிரமிப்புகள் இருக்கிறது. அது மட்டுமின்றி சன்னதி வீதியில் கோயில் முகப்பின் கலை அழகை பாதிக்கின்ற வகையில் 12 பேர் கடையை கட்டி ஆக்கிரமித்துள்ளனர்.

இது தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டதின் பேரில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையர் பரணிதரன் மற்றும் தாசில்தார் சிவக்குமார், கிராம நிர்வாக அதிகாரி சுந்தரி உள்ளிட்டோர் ஜேசிபி இயந்திரத்துடன் கோயில் முகப்பில் உள்ள கடைகளை அகற்றுவதற்காக நேற்று (நவம்பர் 26) சென்றனர்.

இதனை அறிந்து கொண்ட ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடை உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் ஒன்றாக சேர்ந்து அதிகாரிகளை முற்றுகையிட்டனர். கடையை இடிக்கக்கூடாது எங்களின் வாழ்வாதாரம் பாதிக்ககும் என்று கோஷங்களையும் எழுப்பினர். இதனை ஏற்றுக்கொள்ளாத அதிகாரிகள் கடைகளை இடிக்க முற்பட்டபோது, கடையின் உரிமையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அழைத்து ஒரு தனியார் பேருந்தில் ஏற்றி திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதன் பின்னர் 12 கடைகளையும் ஜேசிபி இயந்திரத்துடன் போலீசார் அகற்றினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதனால் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News