அன்றே அப்துல்காலம் ஜனாதிபதியாவதை தடுத்த தி.மு.க - தமிழனுக்கு எதிராக நடந்த சதி!

Update: 2022-06-23 12:36 GMT

ஒடிசாவில் பிறந்த ஒடிசாவின் மகளான பா.ஜ.க-வின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு அவர்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் கட்சி பேதமின்றி அனைத்து ஒடிசா எம்.எல்.ஏ-க்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என மாற்று கட்சியை சார்ந்த ஒடிசா முதல்வர் திரு.நவீன் பட்னாயக் கிட்டத்தட்ட களத்தில் இறங்கி பிரச்சாரமே செய்கிறார்.

ஆனால், தமிழகத்தில் தி.மு.க 1987 ஜனாதிபதி தேர்தலில் தமிழரான ஆர்.வெங்கட்ராமனுக்கு ஆதரவளிக்காமல் கேரளாவை சேர்ந்த வி.ஆர்.கிருஷ்ணா ஐயரை ஆதரித்தது. அதேபோல், 2012-ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தமிழரான Dr.அப்துல் கலாம் ஐயா அவர்களை ஆதரிக்காமல் கிஞ்சித்தும் சலனமின்றி "கலாம் என்றால் கலகம்" என நா கூசாமல் பேசியது. தமிழரான மூப்பனாரை பிரதமர் ஆகாமல் தி.மு.க பார்த்துக்கொண்டதும் நாடறிந்த கதை.

சக தமிழர்களை இந்நாட்டின் உயர் பொறுப்புகளுக்கு ஆதிரிக்க மனம் வராத, தமிழின விரோத இயக்கமாம் தி.மு.க எக்காலமும் தமிழகத்திற்கு பிடித்த பெருந்துயரம் மற்றும் சாபம் என்பதில் எனக்கு ஏதொரு மாற்றுக்கருத்தும் இல்லை என தமிழக பாஜக செயலாளர் எஸ்.ஜி சூர்யா கண்டனம் தெரிவித்துள்ளார். 

Similar News