சென்னையில் ஆன்லைன் கடனை வசூலிக்க ஆபாசமாக சித்தரிப்பு - அதிர்ச்சியில் வாலிபர் தற்கொலை!

Update: 2022-06-21 05:13 GMT

ஏழை, எளிய மக்கள் தங்களின் பணத்தேவைகளுக்காக சில தனியார் நடத்தும் ஆன்லைன் கடன் செயலிகள் மூலமாக கடன் பெறுகின்றனர். அதனை திரும்ப செலுத்துவதற்கு சற்று காலதாமதம் ஆவதால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பணத்தை வசூல் செய்வதற்கு பல்வேறு யுக்திகளை கையாள்கிறது. அதிலும் கடன் பெற்றவர்களை அவமானப்படுத்தி அவர்களை கூனிக் குறுகச் செய்வதன் மூலமாக பணத்தை விரைந்து வசூல் செய்ய முடியும் என நினைக்கின்றனர்.

இது போன்று செய்வதால் சிலர் அவமானம் தாங்க முடியாமல் தங்களின் உயிர்களையும் மாய்த்துக் கொள்கின்றனர். அதே போன்று தற்போது சென்னையில் இன்று ஒருவர் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டுள்ள ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது.

சென்னை, சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் ஒரு தனியார் ஓட்டலில் பணியாற்றி வந்தார். பணத்தேவைகளுக்காக ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் பெற்றுள்ளார். பணம் கிடைப்பதில் காலத்தாமதம் ஆனதால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் அவருடைய புகைப்படத்தை ஆன்லைன் செயலி நிறுவனம் மிகவும் ஆபாசமாக சித்தரித்து அதனை அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பியுள்ளனர். இதனை பார்த்த பாண்டியன் தூக்கு போட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே ஆன்லைன் செயலிகள் மூலமாக கடன் பெற்று பலர் தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில், அதனை ஏன் அரசு தடை செய்யவில்லை என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News