தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை !
தமிழகத்தில் 21ம் தேதி 6 மாவட்டங்களுக்கும் 22ம் தேதி 4 மாவடங்களுக்கும் மிக மிக மழையான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 21ம் தேதி 6 மாவட்டங்களுக்கும் 22ம் தேதி 4 மாவடங்களுக்கும் மிக மிக மழையான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மிக கன மழைக்கும், மேலும் பல்வேறு மாவட்டங்களில் கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது. புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, சேலம், மதுரை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளை இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்.நாளை மறுநாள் 21ம் தேதி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிக கனமழை பெய்யும்.
மேலும், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்யும். வருகின்ற 22ம் தேதி சேலம், நாமக்கல், தருமபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், கடலூர், விழுப்புரம், கன்னியாகுமரி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Dinamalar