தருமபுரி: கழிவறை சுத்தம் செய்ய ஆபத்தான முறையில் தண்ணீர் எடுத்துச் செல்லும் அரசு பள்ளி மாணவர்கள்!

Update: 2022-04-01 11:44 GMT

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி அரசு பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்வதற்கு, கிராமத்தில் அமைந்திருக்கும் தொட்டியில் மிகவும் ஆபத்தான முறையில் தண்ணீர் எடுத்து செல்லும் மாணவர்களின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலக்கோடு தொகுதிகுட்பட்ட பஞ்சப்பள்ளி அருகே கும்மனூர் கிராமம் அமைந்துள்ளது. அங்கு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 5 ஆசிரியர்கள் உள்ளனர்.

மாணவ, மாணவிகள் சுமார் 81 பேர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தூய்மைப் பணியாளர்கள் யாரும் இல்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் கையில் குடத்தை எடுத்துக்கொண்டு கிராமத்தில் அமைந்துள்ள தொட்டியில் உயிரை பணயம் வைத்து தண்ணீர் எடுத்து செல்கின்றனர். அது மட்டுமின்றி கழிவறையை சுத்தம் செய்வதற்காக மாணவர்களே தண்ணீர் நிரப்பி வருகின்றனர். இதில் மாணவர்கள் சற்று ஏமாந்தாலே மிகப்பெரிய தண்ணீர் தொட்டியில் விழுந்து அடிப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Tags:    

Similar News