சிறுவாச்சூர் பெரியசாமி கோயிலில் பாலாலயம் நிகழ்ச்சி!

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் மிகவும் பிரசித்திபெற்ற மதுர காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும், இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம்.

Update: 2021-11-24 02:20 GMT

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் மிகவும் பிரசித்திபெற்ற மதுர காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும், இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம்.

இதனிடையே உபகோயிலான பெரியசாமி கோயில் சிறுவாச்சூர் பெரியசாமி மலையில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் கடந்த ஒரு மாத்திற்குள் 3 முறை சாமி சிலைகள் உடைத்து மர்ம நபர்கள் அட்டூழியம் செய்து வந்தனர். இந்த சம்பவத்துக்கு பாஜக மற்றும் இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். சிலைகளை உடைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற போராட்டங்களை முன்வைத்தனர். இதனிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோயில் பகுதியைச் சேர்ந்த நாதன் என்ற நடராஜனை பெரம்பலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், உடைக்கப்பட்ட கோயிலில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகமும் முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டனர். அதன்படி சுடு மண் சிற்பங்கள் தயார் செய்வதில் மிகவும் அனுபவமிக்க ஸ்தபதி வெள்ளியனூர் முனியசாமி சமீபத்தில் சிறுவாச்சூர் கோயிலுக்கு வருகை புரிந்து பார்வையிட்டார். இதன் பின்னர் கோயிலில் வைப்பதற்கான சுடுமண் சிற்பங்களை 6 மாதங்களில் செய்து முடித்து தருவதாக தெரிவித்திருந்தார். இதனால் கோயிலில் கடந்த 21ம் தேதி பாலாலயம் நடைபெற்றது. கோயிலில் சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Dinamani

Image Courtesy:Facebook


Tags:    

Similar News