தமிழகத்துக்கு ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்கிய பிரதமர் மோடி: நிகழ்ச்சியை புறக்கணித்த ராமநாதபுரம், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்!

உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷ் நகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து பிரதமர் மோடி பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் 35 புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதே போன்று நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

Update: 2021-10-07 12:35 GMT

அதே போன்று ராமதாதபுரம் மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) காமாட்சி கணேசன், எம்.பி., நவாஸ்கனி, எம்.எல்.ஏ., காதர்பாட்சா, முத்து ராமலிங்கம் மற்றும் மருத்துவமனை சார்பில் கண்காணிப்பாளர் மலர்வண்ணன், மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்தவாறு காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார்.

இந்நிலையில், நிகழ்ச்சி துவங்கும்போது இருந்த எம்.பி. நவாஸ்கனி, எம்.எல்.ஏ. காதர்பாட்சா, முத்துராமலிங்கம் ஆகியோர் பிரதமர் மோடி பேச துவங்கும் முன், மேடையிலிருந்து இறங்கி சென்று விட்டனர்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற பிரதமர் மோடி நிகழ்ச்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் புறக்கணித்துவிட்டு சென்றது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Amma Express

Tags:    

Similar News