ஆதரவற்ற மாணவர்களுக்கு அனைத்தும் இலவசம் - சென்னை இராமகிருஷ்ண மிஷன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Update: 2022-05-26 08:24 GMT

தாய், தந்தையை இழந்த ஆதரவற்ற மாணவர்களுக்கு சென்னை மயிலாப்பூர் இராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தில் தங்குமிடத்துடன் இலவசக் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 100 வருடங்களுக்கும் மேலாக கல்வி சேவையில் ஈடுபட்டு வரும் இராமகிருஷ்ண மிஷன் இல்லத்தில் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 6ம் வகுப்பிலும்,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு டிப்ளமோ படிப்பில் சேரவும் , 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 2 ஆம் ஆண்டிலும் கல்வி கற்க தகுதிபெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இங்கு உணவு, தங்குமிடம், கல்வி ஆகிய அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் www.rkmshome.org.in/admissions என்ற இணையதளத்தை அணுகலாம் அல்லது 044 - 24990264, 044 - 42107550 என்ற எண்களுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Inputs From: News 18

Similar News