கடையநல்லூரில் ரூ.10 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு!
கடையநல்லூர் அடுத்த கிருஷ்ணாபுரத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்கப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
கடையநல்லூர் அடுத்த கிருஷ்ணாபுரத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்கப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கோபாலகிருஷ்ணன் சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு 9.73 ஏக்கர் நிலம் கிருஷ்ணாபுரத்தில் இருக்கிறது. இந்த நிலத்தை ஆக்கிரமித்து அதற்கு முறையான சந்தாகூட கட்டாமல் அனுபவித்து வந்துள்ளனர். இது தொடர்பாக கோயில் நிர்வாகம் பலமுறை ஆக்கிரமிப்பாளர்களிடம் கேள்வி எழுப்பியபோதும் கண்டும், காணாமல் இருந்துள்ளனர். இதனையடுத்து கோயில் நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தது.
அதே போன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை, நிலத்தை மீட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தென்காசி உதவி ஆடசியர், தாசில்தார் உள்ளிட்டோர் ரூ.10 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டு மீண்டும் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர். இதன் பின்னர் கோயிலுக்கு சொந்தமான இடம் எனவும் பேனர் வைத்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு கடையநல்லூர் மக்கள் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.
Source, Image Courtesy: Daily Thanthi