தமிழ்நாடு அரசுக்கு ரூபாய் ரூ7,056 கோடி கூடுதல் கடன்: அசத்தும் மத்திய அரசு அனுமதி

மின்துறை சீர்திருத்தங்களுக்காக தமிழ்நாடு அரசு ரூபாய் 7054 கோடி கடன் பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

Update: 2023-06-29 14:15 GMT

மின்சாரத் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் மாநிலங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் கூடுதல் கடன்களை பெறுவதற்கு அனுமதி அளிப்பது போன்ற நிதி ஊக்குவிப்பை மத்திய நிதி அமைச்சகத்தின் செலவின துறை வழங்கி வருகிறது. மின்சாரத் துறையில் செயல் திறன் மற்றும் திறனை அதிகரிக்க சீர்திருத்தங்களை செயல்படுத்தி வரும் மாநிலங்களை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.


இந்த முன்முயற்சியை மத்திய அரசு 2021-  2022 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன் கீழ் மாநிலங்களின் கூடுதல் கடன் பெறும் வசதி அந்தந்த மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 சதவீதம் அதிகரிக்கும். இது 2021- 2022 முதல் 2024 - 2025 வரை நான்கு ஆண்டு காலத்துக்கு கிடைக்கும். இந்த கூடுதல் நிதி ஆதரவு மாநிலங்கள் மின்சாரத் துறையில் மேற்கொள்ளும் சீர்திருத்த அமலாக்கங்களை பொறுத்தமையும்.


இந்த நிலையில் மதிய மின்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் 2021- 2022, 2022 -  2023 ஆகிய ஆண்டுகளுக்கான  சீர் திருத்தங்களுக்காக 12 மாநில அரசுகளுக்கு கடன் அனுமதியை மத்திய நிதி அமைச்சகம் வழங்கி உள்ளது. இந்த கூடுதல் கடன் அனுமதியின் மூலம் ரூபாய் 66 ஆயிரத்து 413 கோடி நிதி ஆதாரத்தை மாநிலங்கள் பெருக்கிக் கொள்ள முடியும்.


இதில் தமிழ்நாடு அரசுக்கு ரூபாய் 7054 கோடி கூடுதல் கடன் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்துக்கு அதிகபட்சமாக ரூபாய் 15 ஆயிரத்து 253 கோடியும், ராஜஸ்தானுக்கு 11,308 கோடியும் ஆந்திராவுக்கு 9,574 கோடியும் கடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Similar News