சிதிலமைடயும் தென்காசி விஸ்வநாதர் கோவில் - கண்டுகொள்ளுமா அறநிலையத்துறை? எதிர்பார்ப்பில் பக்தர்கள்

தென்காசியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் சிலைகள் சேதம் அடைந்து வருவதால் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என தென்காசி பகுதியில் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2022-05-16 14:30 GMT

தென்காசியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் சிலைகள் சேதம் அடைந்து வருவதால் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என தென்காசி பகுதியில் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

17ஆம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்ட பழம்பெருமை வாய்ந்தது தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் இங்குள்ள மூலவர் காசி விசுவநாதர், உலகம்மன், முருகன் தனித்தனி சன்னதியில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர்.

தென்காசி நகரில் ஓடிக்கொண்டிருந்த சித்ரா நதி இந்த கோவில் கட்டும் பொழுது திருப்பி திருப்பி விடப்பட்டதாக கூறுகிறார்கள் கோவிலைச் சுற்றிய தென்காசி நகரம் நிர்மாணிக்கப்பட்டது.

1990ஆம் ஆண்டில் 180 அடி உயரத்தில் 9 நிலை அடுக்கில் கொண்ட மிகப் பெரிய ராஜகோபுரம் கட்டப்பட்டு மகா கும்பாபிஷேக விழாவும் நடைபெற்றது.

அதன் பின்னர் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகம் முடிவடைந்த நிலையில் தற்போது 16 வருடங்களாக கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் அது நடக்கவில்லை என்பதால் கோவிலில் உள்ள சுவாமி சிலைகள் சேதம் அடைந்து வருகின்றன. இதனால் அந்த பகுதி பக்தர்கள் மன வேதனை அடைந்துள்ளனர், எனவே இப்பகுதி கோவிலை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அறநிலையத்துறை செவி சாய்க்குமா? 


Source - News 18 Tamil

Similar News