தி.மு.க அமைச்சர் வந்த நிகழ்ச்சிக்கு மாணவர்களே பெஞ்சு தூக்க வைத்த அவலம்
விலையில்லா மிதிவண்டி வழங்கும் பள்ளி நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த அமைச்சர்.
மயிலாடுதுறை மாவட்டம் கிட்டப்பா மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சிக்காக தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஸ்வேதா, முருகன், பன்னீர்செல்வம் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொள்ள இருந்தார்கள். ஆனால் அமைச்சர் வரும் விழாவிற்காக மாணவர்களை சார் பெஞ்சுகளை சுமக்க வைத்த சம்பவம் வீடியோவாக வெளியாக்கி சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இவ்விழாவில் அமைச்சர் மெய்ய நாதன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பிற்பகல் 3 மணி என்று நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டிருந்ததால் மதியம் 2 மணியிலிருந்து மாணவ, மாணவிகள் பந்தலில் காக்க வைக்கப்பட்டார்கள். 5 மணி மேலாக்கியும் அமைச்சர் வரவில்லை. பிறகு தாமதமாக நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய மெய்ய நாதன், இரண்டு, மூன்று விழாக்களில் தொடர்ந்து இருந்தால் குறித்த நேரத்திற்குள் வர முடியவில்லை என்று தாமதத்திற்கான காரணத்தை கூறினார்.
நிகழ்ச்சி மிகவும் தாமதமாக தொடங்கியதால் மாலை ஆறு மணி அளவில் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சிக்காக வகுப்பறையில் இருந்து பெஞ்சுகளை மாணவர்கள் சுமந்து வந்த வீடியோ வெளியாக்கியதில் இருந்து, சமூக ஆர்வலர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். குறிப்பாக ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை நிகழ்ச்சிகளின் போது மாணவர்களை எந்த ஒரு வேலையும் வாங்கக்கூடாது என்று அனைத்து பள்ளிகளுக்கும் அறிக்கை அனுப்பியிருந்தது. இருந்தாலும் இது போன்ற செயல்கள் சில பள்ளிகளில் நடைபெற்று வருவதாகவும் குற்றம் சாட்டினார்கள்.
Input & Image courtesy: Vikatan News