கோவையில் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
கோவையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இருந்த போதிலும் மக்கள் அதிகம் கூடும் இடமான திரையரங்குகள், மார்க்கெட், ஜவுளிகடைகள், நகைகடைகள், பொழுதுபோக்கு கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், தனியார் கேளிக்கை ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டிருக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், திருமண மண்டபங்களில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களை ஒரு வாரத்திற்கு முன்னரே சம்பந்தப்பட்ட வட்டாச்சியருக்கு தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Source: News J
Image Courtesy:Trip Advisor