தமிழ்நாட்டில் பாரத் பெட்ரோலிய நிறுவனம், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை திறந்துள்ளது!

Update: 2022-02-18 11:35 GMT

தமிழ்நாட்டில் 10 பாரத் பெட்ரோல்   நிலையங்களில், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.


மத்திய பா.ஜ.க அரசு மின்சார வாகனங்களுக்கான உற்பத்தி மற்றும் பயன்பாடுகளை  ஊக்குவிப்பதற்காக பல எண்ணற்ற முயற்சிகளை எடுத்து சாதித்து வருகிறது. மின்சார வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி வரி குறைப்பு அதற்கு ஒரு சிறந்த உதாரணம் ஆகும் .

அரசு எடுத்த பல முயற்சிகளால், இந்தியர்கள் அதிக அளவில் மின்சார வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பாரத் பெட்ரோலிய நிறுவனம், தன் பெட்ரோல்  நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைக்க திட்டமிட்டது.  


அதன் முதல் கட்டமாக, தமிழ்நாட்டிலுள்ள   சென்னை- திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில், 10 பெட்ரோல் நிலையங்களில், அதி விவேக மின்சார சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின்  உயர் அதிகாரி பி.எஸ் ரவி கூறுகையில் " இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த முன்னெடுப்பு அடுத்தடுத்து விரிவாக்கம்  செய்யப்படும். சென்னை-திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மின்சார சார்ஜிங் மையங்கள் நூறு கிலோ மீட்டர் இடைவெளியில் 10 மையங்களாக  அமைக்கப்பட்டுள்ளது. மின்சார வாகன ஓட்டிகளின் நலன் கருதி பல முயற்சிகளை எடுத்து வருகிறோம்.

என்று கூறினார்.

SWARAJYA

Similar News