தஞ்சாவூர்: பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 4 பேருக்கு கொரோனா !
தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், கடந்த 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 438 பள்ளிகள், 55 கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இதனிடையே பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதற்கு முன்பாக சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அது போன்று நடத்தப்பட்ட சோதனையில் காய்ச்சல் மற்றும் சளி போன்ற அறிகுறியுடன் அரசுக் கல்லூரி மாணவி ஒருவருக்கும், திருப்பனந்தாள் அரசுப் பள்ளி மாணவி ஒருவருக்கும், கண்ணந்தங்குடி, பேராவூரணி பள்ளி மாணவர்கள் இரண்டு பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த பள்ளியில் படித்த மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பதற்றமான சூழல் உண்டாகியுள்ளது. பெற்றோர்களும் அச்சமடைந்துள்ளனர்.
Source, Image Courtesy: Puthiyathalamurai
https://www.puthiyathalaimurai.com/newsview/114912/Tanjore-Corona-for-4-school-and-college-students-security-work-intensified