கோயில் இடத்தில் அரசு கட்டிடம் கட்டுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு!

Update: 2022-06-29 08:06 GMT

சிங்கம்புணரி அருகே உள்ள காளாப்பூர் என்ற கிராமத்தில் நெடுஞ்சாலையை ஒட்டி கருப்பர் கோயில் ஒன்று உள்ளது.

இந்நிலையில், சிங்கம்புணரியில் பல அரசு கட்டிடங்கள் கட்டுவதற்கு இடம் தேர்வு நடைபெற்றது. இதில் கொக்கன் கருப்பர் கோயில் அமைந்துள்ள இடத்தின் அருகாமையில் நீதிமன்றக் கட்டிடம் கட்டுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் நில அளவிடும் பணி வருவாய்த்துறை மூலமாக நடைபெற்றது. இதனை அறிந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் பெரியகருப்பன் உள்ளிட்டோரிடம் மனு அளித்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கொக்கன் கருப்பர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக பா.ஜ.க. பிரமுகர் ஹெச்.ராஜா வந்திருந்தார். அப்போது அவர் பேசும்போது, 100 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள கோயில்களை மத்திய தொல்லியல் துறை வழிகாட்டுதலின்படி பராமரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், காளாப்பூர் கொக்கன் கருப்பர் கோயில் பல நூறு ஆண்டுகளாக உள்ளது. இங்கு வந்து அரசு கட்டிடம் கட்டுவதற்கு முயற்சி செய்வது இந்து மத உணர்வை தடுக்கின்ற செயலாக உள்ளது. பொதுமக்கள் ஆன்மீக பணியை தொடர்வதற்கு அரசு உதவியாக இருக்க வேண்டும். எனவே கோயில் இடத்தில் எந்த ஒரு கட்டிடத்தையும் மாநில அரசு கட்டக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

Source, Image Courtesy: Daily Thanthi

Similar News