'மேயர் வேலையே செய்யலை', சொந்தக்கட்சி மேயருக்கு எதிராக தி.மு.க கவுன்சிலர்கள் போர்க்கொடி - முட்டிக்கொள்ளும் மதுரை தி.மு.க

'வார்டுக்கு தேவையான அத்தியாவசியமான பணிகளை மாநகராட்சி செய்வதில்லை நேரம், தீர்மானங்கள் நிறைவேற்றுவதில்லை' என தி.மு.க மேயருக்கு எதிராக தி.மு.க கவுன்சிலர்கள் மன்ற கூட்டத்தில் புகார் எழுப்பியது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-06-25 05:39 GMT

'வார்டுக்கு தேவையான அத்தியாவசியமான பணிகளை மாநகராட்சி செய்வதில்லை நேரம், தீர்மானங்கள் நிறைவேற்றுவதில்லை' என தி.மு.க மேயருக்கு எதிராக தி.மு.க கவுன்சிலர்கள் மன்ற கூட்டத்தில் புகார் எழுப்பியது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சியில் தி.மு.க'வை சேர்ந்த இந்திராணி பொன் வசந்த் மேயராகவும், சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த நாகராஜன் துணை மேயராகவும் தேர்வு செய்யப்பட்டார்கள். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிபாரிசால் இப்பதவிக்கு இவர்கள் அனுமதிக்கப்பட்ட நல்ல முதல் இன்று வரை பெரும்பாலான தி.மு.க கவுன்சிலர்கள் மாவட்ட நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அதுமட்டுமின்றி இந்திராணி பொன் வசந்த் பொறுப்பேற்ற நாளிலிருந்து சர்ச்சைகள் தொடர்ந்து வருகிறது. மாநகராட்சி நிர்வாகத்தில் கணவர் பொன் வசந்த் தலையீடு ஒரு பக்கம் என்றால் மேயருக்கு ஆலோசகர் என்ற பதவியை உருவாக்கி தியாகராஜனின் அலுவலகத்தில் பணியாற்றிய பெண்மணி நியமிக்கப்பட்டு அனைத்து விஷயத்திலும் அவர் தலையிடுவது சர்ச்சையாகி வருகிறது. இந்த அரசியலில் சிக்கி தவித்த மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கடந்த மாதம் இடமாறுதல் வாங்கிக்கொண்டு சென்று விட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புதிய ஆணையராக வந்தாலும் மந்தமான ஸ்மார்ட் சிட்டி வேலைகள், வரி வசூல் செய்வதில் பாரபட்சம் அத்தியாவசிய பணிகள், தூய்மை பணிகள் பிரச்சனை என மாநகராட்சி பணிகள் அனைத்தும் தேக்கம் அடைந்துள்ளது.

இந்த நிலையில்தான் நாலாவது மாமன்ற கூட்டம் நடந்தது, வழக்கம்போல அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர், இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ம.தி.மு.க எம்.எல்.ஏ பூமிநாதன், 'மாநகராட்சி முக்கிய பணிகள் ரொம்ப மெதுவாக நடக்கிறது, குடிநீர் குழாய் பதிக்கும் பணி, சாக்கடை பணிகள் எல்லாம் மெதுவாக நடக்கிறது என்பதை தெளிவுபடுத்துங்கள்' என்றார்.

தி.மு.க நிர்வாகியும், கவுன்சிலருமான ஜெயராம் பேசும்போது எம்.ஜி.ஆர் அவர்களால் 1980'ல் கட்டப்பட்ட மாநகராட்சி திருமண மண்டபம் அப்பகுதி மக்களுக்கு பயன்பட்டது, எனது திருமணமும் அங்கு தான் நடந்தது. இதில் இடையில் அதை கரிமேடு போலீஸ் ஸ்டேஷனுக்கு வாடகை கொடுத்தால் மக்கள் பயன்படுத்த முடியவில்லை 40 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்திருக்கிறார்கள். அதை மீட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்' என்றார்.


நம் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்கள் 1,950 பேர் பணிபுரிவதற்கு கணக்கு காட்டுகிறார்கள் ஆனால் 750 பேர் தான் வேலை செய்கிறார்கள் மீதிப்பேர்களின் ஊதியம் எங்கே செல்கிறது? அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு தொழிலாளருக்கும் ரூ.21,000 ஊதியம் என குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் மிக குறைவாக ரூ.8000 தான் வழங்கப்படுகிறது மீதி பணமெல்லாம் எங்கே போகிறது? எனக்கு கேட்டார்.

சொந்தக் கட்சி கவுன்சிலர்களின் ஒத்துமை இல்லாமல் இருக்கும் இந்த நிலையில் மேயர் இந்திராணி பொன் வசந்த் ஏற்பாட்டில் கவுன்சிலர்கள், மாநகராட்சி, அலுவலர்கள் ஒப்பந்தக்காரர்கள் ஆகியோருக்கு கறி விருந்து நடந்தது. இந்த நிகழ்வுக்கு மதுரை மாவட்டத்தில் நான்கு மாவட்ட செயலாளர்கள். புதிய நிர்வாகிகள் அழைக்காமல் சிறப்பு விருந்தினராக அமைச்சர் தியாகராஜனை மட்டும் அழைத்து விருந்து வைத்து நடத்தினர்.


இதன் காரணமாக மதுரை உட்கட்சிப் பூசல் மேலும் அதிகரித்துள்ளது. அமைச்சர் பி.மூர்த்தி, எம்.எல்.ஏ'க்கள் ஆகியோர் ஒருபுறமும், மற்றொரு புறம் பழனிவேல் தியாகராஜன் ஆட்கள் என மதுரை தி.மு.க மல்லுக்கட்ட துவங்கிவிட்டது.


Source - Junior Vikatan

Similar News