'இதை விடவே கூடாது' - கட்டாய மதமாற்றம் பற்றி எச்சரித்த பேரூர் ஆதீனம்

கட்டாய மதமாற்றத்தை தடுக்க வேண்டியது அவசியமானது மேலும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கூறியுள்ளார்.

Update: 2022-06-06 06:15 GMT

கட்டாய மதமாற்றத்தை தடுக்க வேண்டியது அவசியமானது மேலும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கூறியுள்ளார்.

விஸ்வ ஹிந்து பரிசத் வழிகாட்டும் அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை சார்பில் மதுரையில் துறவியர் மாநாடு நேற்று துவங்கியது, இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில் பேசிய பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கூறியதாவது, 'இந்து சமயம் பெரும்பான்மை மக்களின் சமயமாக உள்ளது, ஆனால் இந்து சமயம் புறக்கணிக்கப்படும் நிலைதான் நிலவுகிறது. கோவில்களை தன் வாரியத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது, போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது ஆனால் அது தற்போது வரை பரிசீலிக்கப்படாமல் இருக்கின்றது.

கட்டாய மதமாற்றம் என்பது பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது, இது உலகத்திற்கு அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இதனால் கட்டாய மதமாற்றத்தை தடுக்க வேண்டியது அவசியமானது! தாய் மதம் திரும்பும் இந்துக்களுக்கு உரிய உதவிகளை இந்து சமய அறநிலையத்துறை செய்ய வேண்டும் அதே நேரத்தில் மதமாற்றத்திற்கு காரணமாக கூறப்படும் சமூக ஏற்றத்தாழ்வுகள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்' எனவும் பேரூர் ஆதீனம் கூறினார்.



Source - One India Tamil

Similar News