திருப்பூரில் 'லவ் ஜிகாத்' குறித்த பகீர் புகார் அளித்த பெண் - நிர்வாண படங்களை வைத்து மிரட்டுவதாக அதிர்ச்சி தகவல்
கரூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், மதம் மாற கட்டாயப்படுத்தி மிரட்டி வரும் வாலிபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
ஹிந்து முன்னணி கோட்ட செயலாளர் கிருஷ்ணன், பரமேஸ்வரனுடன் வந்த பெண் அளித்துள்ள புகார் மனு:
கரூரில் குடும்பத்தினருடன் வசிக்கிறேன். ஊரடங்கு சமயத்தில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்தபோது, திருப்பூரைச் சேர்ந்த இமான் ஹமீப் என்பவர் அறிமுகமானார். அவர் என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாக கூறினார். அவர் கேட்டதன் பேரில், பண உதவி, செய்து கொடுத்தேன்.
திருப்பூரில் வேலை தருவதாக சொல்லி என்னை திருப்பூர் வர வழைத்து, காசிபாளையம் காஞ்சி நகரில் தங்க வைத்தார். போதையில் அடித்து துன்புறுத்தி, நிர்வாணமாக்கி மொபைல் போனில் போட்டோ எடுத்தார். திருமணம் செய்து கொள்ள மதம் மாறுமாறு மிரட்டினார்.கடந்த 2021ல் தீபாவளியன்று ஊருக்கு சென்று விட்டேன்.
மீண்டும் திருப்பூர் வந்தபோது, மொபைல் போனை பறித்து, என் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு சென்று, தனிமையில் இருந்த படங்களை பகிர்ந்தார். ஆபாசமாக எடுக்கப்பட்ட போட்டோ, வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று, மிரட்டினார்.
என் மொபைல் போனில் இருந்த உறவினர்கள், நண்பர்களின் மொபைல் எண்களுக்கு அழைத்து, என்னை பற்றி அவதுாறாக பேசி வருகிறார். தினமும் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
Inputs From: News 18