இதுதான் கொடுத்து பிடுங்கறது - பருத்தி மீதான 1% செஸ் வரியை நீக்கிவிட்டு, உணவு பொருட்களின் மீது வரி ஏற்றிய தமிழக அரசு!

Update: 2022-06-29 08:46 GMT

தமிழ்நாடு வேளாண் பொருள்கள் விற்பனை ஒழுங்குமுறைச் சட்டம் 1987 பிரிவு 24-ன்படி, பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சின்மீது சந்தை நுழைவுவரியாக ஒரு சதவிகிதம் விதிக்கப்படுகிறது. நெசவாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, பஞ்சு மீதான ஒரு சதவிகிதம் சந்தை நுழைவு வரி ரத்துசெய்யப்படுவதாக கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 

இந்த நிலையில் பருத்தியின் மீது வரி ரத்து செய்துவிட்டு, உணவு பொருட்கள் மீது வரி கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நெல், எள், பருத்தி, கடலை உள்ளிட்ட 8 வகையான விளை பொருட்களுக்கு செஸ் வரி உள்ளது. ஆனால் தற்போது ஆமணக்கு, சூரியகாந்தி போன்ற எண்ணெய் வித்துக்கள், துவரை, உளுந்து, பாசிப்பயிறு, கொண்டக்கடலை போன்ற பயறு வகைகள், நெல், கம்பு, சோளம், ராகி போன்ற தானியங்கள். பூண்டு, ஏலக்காய், இஞ்சி, வெல்லம், இலவம்பஞ்சு என 40 வகையான பொருட்களுக்கு செஸ் வரி விதிக்கப்பட்டள்ளது.

பிற மாநில கொள்முதல் , மார்க்கெட்டிற்கு வெளியே நடக்கும் வியாபாரம், விவசாய விளை பொருட்கள் நேரடி கொள்முதல் போன்வற்றிற்கும் ஒரு சதவீத செஸ் வரி செலுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த வரி விதிப்பு விவசாயிகளை நேரடியாக பாதித்து, விலைவாசி உயர்வு மேலும் அதிகரிக்க வழிவகுக்கும். மானாவாரி பயிர்களாக எண்ணெய் வித்துக்கள், பயறு வகைகள், இலவம் பஞ்சு, வெளிமாநில இறக்குமதிக்கும் செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது. 

வேளாண் விளை பொருட்களான தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்களுக்கு வேளாண் வணிக துறை ஒரு சதவீத செஸ் வரி விதித்துள்ளதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதனால் விலைவாசி உயரும் அபாயம் உள்ளது.


Similar News