ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடற்கரைக்கு செல்ல அனுமதி!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் சூழ்நிலையில், புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இனி வரும் காலங்களில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடற்கரைக்கு செல்லலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.;

Update: 2021-10-14 12:46 GMT
ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடற்கரைக்கு செல்ல அனுமதி!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் சூழ்நிலையில், புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இனி வரும் காலங்களில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடற்கரைக்கு செல்லலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் தலைமைச் செயலர் இறையன்பு மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதில் நடத்தப்பட்ட ஆலோசனையில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Topnews Tamil


Tags:    

Similar News