தருமபுரி: ரயில் பாதையில் சிதறி கிடந்த பொம்மை ரூபாய் நோட்டுகள் ! போலீசார் தீவிர விசாரணை!

தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே ரயில் பாதை அருகில் பொம்மை ரூபாய் நோட்டுகள் கத்தை கத்தையாக சிதறி கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-08-24 10:04 GMT

தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே ரயில் பாதை அருகில் பொம்மை ரூபாய் நோட்டுகள் கத்தை கத்தையாக சிதறி கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் பெங்களூரு ரயில் பாதையில், சேலம் மாவட்டம் காருவள்ளி ரயில் நிலையத்துக்கும் தருமபுரி மாவட்டம் தொப்பூர் ரயில் நிலையத்துக்கும் இடையே குண்டுக்கல் பகுதி அருகே ரயில் தண்டவாளம் அருகே ரூ.2,000 மற்றும் ரூ.500 மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் இறைந்து கிடந்துள்ளது.

அந்த ரயில் பாதை வழியாக கண்காணிப்பு பணியில் ஈடுபடும் அப்பகுதிக்கான 'கீ மேன்' இன்று காலை வழக்கம் போல சென்றபோது இந்த நோட்டுகளை பார்த்துள்ளார். உடனடியாக இது பற்றி அவர் தொப்பூர் ரயில் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக தீவட்டிப்பட்டி போலீசார் மற்றும் தருமபுரி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.


அப்போது அந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் குழந்தைகள் விளையாடப் பயன்படுத்தும் பொம்மை ரூபாய் நோட்டுகள் என தெரியவந்தது. ஒரு சில லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த நோட்டுகளை ரயில் நிலைய போலீசார் மீட்டனர். இது பற்றி அவர்கள் கூறும்போது, ரயிலில் பயணித்திவர்களின் குழந்தைகள் இந்த நோட்டுகளை தவற விட்டிருக்கலாம், அல்லது சினிமா, தொலைக்காட்சி படப்பிடிப்புக்காக ரயிலில் எடுத்து சென்றபோது தவறி விருந்திருக்கலாம் என கூறினர்.

அல்லது பொம்மை நோட்டுகள் தெரியாமல் ரயில் பயணிகளிடம் யாராவது திருடியபோது கை நழுவி கீழே விழுந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொப்பூர் மற்றும் தருமபுரி பகுதியில் உள்ள மக்கள் இதனை கள்ள நோட்டு என வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்களை பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: HinduTamil

https://www.hindutamil.in/news/tamilnadu/708500-excitement-with-toy-banknotes-lying-on-the-side-of-the-railway-track-near-dharmapuri.html

Tags:    

Similar News