திருச்சி விமான நிலையத்தில் அதிகரிக்கும் கடத்தல்கள் !

Update: 2021-12-12 06:30 GMT

அயல்நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பொருள்கக் குறிப்பாக தங்கம் கடத்துவதில் அதிகளவில் திருச்சி விமான நிலையத்தில் நடக்கிறது.


திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு துபாய், சிங்கப்பூர், மலேசியா எனப் பல நாடுகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து இறங்குகின்றனர். பயணிகளைப்போலவே வெளிநாடுகளிலிருந்து தங்கம் உள்ளிட்ட பொருள்களைக் கடத்திவரும் கடத்தல் கும்பல்களும் இதில் அடக்கம். குறிப்பாக, சமீபகாலமாக தங்கக் கடத்தல் அதிகமாக நடக்கும் இடமாக திருச்சி சர்வதேச விமான நிலையம் மாறிப்போயிருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் துபாயிலிருந்து திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா விமானப் பயணிகளை, விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்துள்ளனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் தடுமாற்றத்துடன் இருவர் நின்றிருக்கிறார்கள். அவர்களின் செயல்களில் சந்தேகம் தென்படவே, உடனே அந்த இருவரையும் அதிகாரிகள் அழைத்துச் சென்று அவர்கள் கொண்டு வந்திருந்த பை, உடைமைகளை சோதனையிட்டுள்ளனர். அதில் எதில் சிக்காமல் போக, போலீஸாருக்கு ஏதோ உறுத்தியிருக்கிறது. உடனே அந்த டிராவல் பேக்கின் அடிப்பகுதியைக் கிழித்துப் பார்த்துள்ளனர். அப்போது டிராவல் பேக்கின் அடிப்பகுதியில் இருந்த பிளாஸ்டிக் கவரில் தங்கத்தை உருக்கி, தடவி எடுத்து வந்திருப்பது தெரியவந்திருக்கிறது. சுமார் 12,44,000 ரூபாய் மதிப்புள்ள 255 கிராம் தங்கத்தைக் கைப்பற்றிய விமான நிலைய அதிகாரிகள், அந்த நபர்கள் இருவரையும் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


இதுமட்டுன்றி கடந்த சில மாதங்களாக திருச்சி விமான நிலையத்தில் அதிகளவில் கடத்தல் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Source - Junior Vikatan

Tags:    

Similar News