வேதாரண்யத்தில் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியது: விவசாயிகள் கண்ணீர்!

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையால் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தற்போது இரண்டாவது முறையாக மழைநீரில் மூழ்கியுள்ளது.

Update: 2021-11-29 05:29 GMT

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையால் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தற்போது இரண்டாவது முறையாக மழைநீரில் மூழ்கியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறியது. அதே போன்று டெல்டா மாவட்டங்களிலும் கொட்டித்தீர்த்த கனமழையால் விவசாய பயிர்களும் சேதமடைந்துள்ளது.

இந்நிலையில், வேதாரண்யம் தலைஞாயிறு மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இரண்டாவது முறையாக பெய்து வரும் மழையால் விவசாய நிலங்கள் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் மழைநீரில் மூழ்கியுள்ளது. மேலும், 10க்கும் அதிகமான கிராமங்களில் மழைநீர் வடிவதற்கு வசதி இல்லாததால் 5 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிர்கள் முற்றிலும் மழை நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கண்ணீர் விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பல லட்சக்கணக்கில் செலவு செய்து பயிரிடப்பட்ட பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Tags:    

Similar News