மழை நின்று 15 நாட்களுக்கு பிறகும் வெள்ளத்தில் மிதக்கும் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில்!
Vellore Jalakandeshwar temple remains waterlogged
மழை நின்று ஓரிரு வாரங்களாவது ஆகியும், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இன்னும் தண்ணீர் தேங்கியுள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன் கோவில் பூஜைக்காக மூடப்பட்டது. அரசு இயந்திரங்களுக்குள் சரியான தொடர்பு இல்லாததால் இதற்கான தீர்வு எட்டப்படவில்லை.
1991-ம் ஆண்டு 55 நாட்கள் கோவில் தண்ணீரில் மூழ்கி இருந்தது. தற்போது அதேபோன்றதொரு சூழலை எதிர்கொள்கிறோம் என்று கோவில் அறங்காவலர் சுரேஷ்குமார் தெரிவித்தார். தற்போது தண்ணீரை வெளியேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பகலில் மழைநீர் வடிந்தாலும், இரவில் மீண்டும் தண்ணீர் கசியும். அகழியில் இருந்து நீரை வெளியேற்றுவதற்கான மதகுகள் முறையாக பராமரிக்கப்படாதது மற்றும் நீர் வாய்க்கால் மற்றும் மீன் சந்தையை சுற்றியுள்ள பகுதிகள் ஆக்கிரமிப்பு ஆகியவை தண்ணீர் தேங்குவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.
இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் கூறுகையில், ""தற்போதைய நிலவரப்படி தண்ணீர் திறந்து விடப்பட்டால், தண்ணீர் வடிந்து செல்ல நீண்ட காலம் பிடிக்கும். தண்ணீர் பிரச்னை தீர்ந்தவுடன் கோவிலை பக்தர்களுக்காக திறக்க திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.
தண்ணீர் தேங்குவதற்கு ஆக்கிரமிப்பு தான் காரணம் என்பதை மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் ஏற்கவில்லை. நாங்கள் உள்ளூர் அறிவைக் கொண்டு வேலை செய்கிறோம். சேனலை விட அவுட்லெட் குறைந்த உயரத்தில் இருப்பதுதான் தற்போதைய பிரச்னை. கோவில் தொட்டியின் மேல் செல்லும் பெங்களூரு சாலை முக்கிய இணைப்பு பாதையாக இருப்பதால் நாங்கள் இரவில் வேலை செய்கிறோம் என தெரிவித்தார்.
பெயர் வெளியிட விரும்பாத பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த இடத்தில் பணிபுரிய இயலாது. கோவில் குளம் ஏஎஸ்ஐயின் கீழ் வருவதால் எங்களால் உள்ளே நுழைய முடியாது. சானல் சாலையின் குறுக்கே ஓடுகிறது, ஆனால் நெடுஞ்சாலைத் துறை எங்களை சாலையைத் தொட அனுமதிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.
வேலூர் துணை வட்டத்தின் ASI மூத்த பாதுகாப்பு உதவியாளர் சுரேஷ் வரதராஜன் கூறுகையில், "ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும், மண் அள்ளுவதும்தான் ஒரே தீர்வு. தொடர்ந்து மழை பெய்ததால் கோவில் குளத்தை தூர்வார வேண்டும் என கலெக்டருக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஆனால் பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதமாகி வருகிறது என்றார்.