BREAKING : விஜயகாந்த் சென்னை திரும்பினார் !

Breaking News.;

facebooktwitter-grey
Update: 2021-09-11 07:08 GMT
BREAKING : விஜயகாந்த் சென்னை திரும்பினார் !

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த மாதம் 30-ந் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் சென்றார். 


இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயகாந்த் குணமடைந்து மருத்துவமனையில் டிவி பார்த்து கொண்டிருப்பது மற்றும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் செவிலியர்களுடன் அமர்ந்து இருப்பது போல் புகைப்படங்கள் வெளியாயின.

இந்த நிலையில் விஜயகாந்த் அவருடைய மனைவி பிரேமலதாவுடன் இன்று அதிகாலை 2.30 மணிக்கு துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை விமான நிலையம் வந்தார். பின்னர் கார் மூலம் வீட்டிற்கு சென்றனர்.

விஜயகாந்த் உடல் நலத்துடன் சென்னை திரும்பி இருப்பது அவரது கட்சியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Maalaimalar

Tags:    

Similar News