நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை! செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு!

சென்னைக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் ஒரே நாளில் 50 மில்லியன் கனஅடி நீர் உயர்ந்தது. இன்று (அக்டோபர் 6) காலை நிலவரப்படி ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடியில் 2,895 மில்லியன் கனஅடி நீரும், நீர்மட்டம் உயர்வான 24 அடியில் 21.15 அடி உயரம் தண்ணீர் நிரம்பியுள்ளது.

Update: 2021-10-06 11:08 GMT

சென்னைக்கு குடிநீர் வழங்கும் மிக முக்கிய ஏரிகளில் செம்பரம்பாக்கம் ஒன்றாகும். இதன் மொத்த பரப்பளவு 6,303 ஏக்கர் ஆகும். இந்த ஏரியில் மொத்தம் 3.6 டிஎம்சி தண்ணீரை சேமித்து வைக்க முடியும். மொத்த நீர் மட்ட உயரம் 24 அடியாக இருந்தாலும் மழை காலத்தில், அணையுடைய பாதுகாப்பை கருதி 21 அடி நீர்மட்டம் நிரம்பினாலே உபரி நீர் திறந்து விடுவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று காலை முதல் பெய்த மழையால் ஏரியின் நீர்மட்டம் 21 அடியாக உயர்ந்தது. இதனால் 2,840 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது. கனமழை பெய்ததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 715 கனஅடி நீர் வருகிறது. இதனால் ஏரியின் காலை நிலவரப்படி மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் 2895 மில்லியன் கனஅடி நீரும், நீர்மட்ட உயர்வான 24 அடியில் 21.15 அடியாக உள்ளது.

Source: News 18 Tamilnadu

Image Courtesy:Maalaimalar

Tags:    

Similar News