ஆட்கொல்லி புலி சுட்டு கொல்லப்படுமா? வனத்துறை வெளியிட்ட தகவல்.!

நீலகிரி மாவட்டம், மசினகுடி, சிங்காரா பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் புலிகளை பிடிப்பதற்காக வனத்துறையினர் கடந்த 9 நாட்களாக ஈடுபட்டுளள்ளனர். புலியை பிடிப்பதற்காக சிறப்பு வீரர்கள் நீலகிரிக்கு வரவழைக்குப்பட்டுள்ளனர்.

Update: 2021-10-03 06:58 GMT

நீலகிரி மாவட்டம், மசினகுடி, சிங்காரா பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் புலிகளை பிடிப்பதற்காக வனத்துறையினர் கடந்த 9 நாட்களாக ஈடுபட்டுளள்ளனர். புலியை பிடிப்பதற்காக சிறப்பு வீரர்கள் நீலகிரிக்கு வரவழைக்குப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் போஸ்பரா வனப்பகுதியில் உலா வந்த, டி23 என்று பெயரிடப்பட்டுள்ள புலிக்கு சுமார் 13வயதாகும் ஆண் புலி, வயது முதிர்வால் தன்னுடைய வேட்டையாடும் திறனையும் முற்றிலும் இழந்துள்ளது. இதனால் தனது வாழ்விடத்தை விட்டு வெளியேறி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து கால்நடைகளையும், மனிதர்களையும் கொன்று வருகிறது. இதுவரை 35க்கும் மேற்பட்ட கால்நடைகள் மற்றும் 4 மனிதர்களை புலி கொன்றுள்ளது. இதனால் புலியை சுட்டாவது பிடிக்க வேண்டும் என்று வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதில் மருத்துவ குழுவினரும் கடந்த 9 நாட்களாக வனத்துறையினர் சேர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதனிடையே மசினகுடியை அடுத்துள்ள சிங்காரா வனப்பகுதியில் ஆட்கொல்லி புலி இருப்பதை கண்டறிந்த வனத்துறையினர், அது பதுங்கியுள்ள இடத்தை பார்த்து மோப்ப நாய் ஒன்றையும் களமிறக்கியுள்ளனர்.

அது மட்டுமின்றி மூன்று இடங்களில் மரத்தின் மேல் பரணம் அமைக்கப்பட்டு, கால்நடைகளை அப்பகுதியில் கட்டிவைத்தும் புலி நடமாட்டத்தை கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணியில் சுமார் 90க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்லும் எண்ணம் வனத்துறைக்கு இல்லை என்று தமிழ்நாடு முதன்மை உயிரின வனபாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் கூறியுள்ளார்.

Source, Image Courtesy: Polimer


Tags:    

Similar News