இனிமேல் அப்படி சொல்ல மாட்டோம்.. நீங்க வாங்க... இந்தியா விட்ட டோஸில் பணிந்த இங்கிலாந்து..!

No quarantine for fully vaccinated Indian flyers from October 11 as UK eases travel restrictions

Update: 2021-10-08 03:48 GMT

இங்கிலாந்து கடந்த மாதம் தடுப்பூசி போட்டிருந்தாலும், அந்நாட்டுக்கு வரும் இந்தியர்களுக்கு ஆர்.டி - பி.சி.ஆர்., சோதனை, தனிமைப்படுத்தல் போன்ற கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர்.இத்தனைக்கும் அங்கு இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து செல்லும் இந்தியர்கள் தடுப்பூசி போட்டிருந்தாலும், விமானப் பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு ஒரு பரிசோதனை, இங்கிலாந்து சென்று இறங்கியதும் மீண்டும் ஒரு பரிசோதனை, பிறகு  10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல், அதில் 8-வது நாள் ஒரு சோதனை செய்து முடிவுகளை சமர்பிக்க வேண்டும் என கூறியிருந்தனர். இது பயணிகளுக்கு செலவை அதிகரிப்பதோடு, கடும் சிரமத்தையும் உண்டாக்கியது.தடுப்பூசி போட்டிருந்தும் இந்தியர்கள் சிரமத்தை அனுபவித்து வந்தனர்.

இது இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இங்கிலாந்தின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக, அந்த நாட்டில் இருந்து இந்தியா வருவோருக்கு 10 நாள் தனிமை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இந்திய வம்சாவளியினராகவே இருந்தாலும், விமானம் ஏறுவதற்கு முன்பு பரிசோதனை, வந்திறங்கியதும் பரிசோதனை, 8-வது நாள் பரிசோதனை 10 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் என அறிவித்தது. அக்டோபர் 4லிருந்து அதனை செயல்படுத்தவும் தொடங்கியது.

இந்த நிலையில் 2 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட இந்தியர்களுக்கு இங்கிலாந்தில் தனிமைப்படுத்துதல் தேவை இல்லை என இங்கிலாந்து அறிவித்து உள்ளது. இதனை இங்கிலாந்து தூதர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில், "இந்தியர்கள் கோவிஷீல்டு அல்லது இங்கிலாந்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள், இங்கிலாந்திற்கு வரும் போது அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படமாட்டார்கள்.

அக்டோபர் 11 ஆம் தேதி முதல் இந்த நடைமுறை பின்பற்றப்படும். கடந்த மாதத்தில் இங்கிலாந்திற்கு முக்கியமான தருணத்தில் ஒத்துழைப்பு கொடுத்த இந்திய அரசுக்கு நன்றி" என்று அலெக்ஸ் எல்லிஸ் பதிவிட்டுள்ளார்.








Tags:    

Similar News