மக்களுடைய நிலத்தை அவர்கள் அபகரிக்காமல் இருந்தாலே போதும்! தி.மு.க-வினருக்கு முதல்வர் பகிரங்க சவால்!

Update: 2021-03-24 01:30 GMT

இரட்டை இலைக்கு வாக்களிப்பதோடு மட்டுமல்லாமல் தி.மு.க.வை ஓட ஓட விரட்டி அடியுங்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்றைக்கு தமிழகம் வெற்றி நடைபோடும் தமிழகமாக விளங்கி வருகிறது. அதை கேட்டாலே ஸ்டாலின் அலறுகிறார். ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

திமுக 2006 தேர்தல் அறிக்கையில் நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் யாருக்கும் நிலம் வழங்கவில்லை. நிலத்தை வழங்கவில்லை என்றாலும் பரவாயில்லை, மக்களுடைய நிலத்தை அவர்கள் அபகரிக்காமல் இருந்தாலே போதும்.

எங்கேயாவது விலை மதிப்புமிக்க நிலம் இருந்தால் போதும், அது உடனடியாக திமுகவினரால் அபகரிக்கப்பட்டது. அதனால் தான் அம்மா அவர்கள் திமுகவினரால் அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டு உரியவர்களிடம் சேர்த்தார்.

தி.மு.க ஆட்சி வந்தால் சட்டம்- ஒழுங்கு சீர் குலைந்து போய்விடும். கழக ஆட்சியில், சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

நீர் மேலாண்மையில் விருது, மின்சாரத்துறையில் விருது, போக்குவரத்துத்துறையில் விருது, உள்ளாட்சித் துறையில் விருது, சுகாதாரத்துறையில் விருது என பல்வேறு துறைகளில் விருதுகளை பெற்றுள்ளோம்.

சேலத்தில் ராணுவ உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வரவுள்ளது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கியுள்ளோம். ஜவுளி பூங்கா அமைக்கவுள்ளோம்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில், தி.மு.கவை ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும். மீண்டும் கோட்டையில் வெற்றிக் கொடியை ஏற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். 

Similar News