ராசாவின் பேச்சுக்கு சப்பை கட்டு கட்டும் ஸ்டாலின்! "வெட்டியும், ஒட்டியும்" என வெட்டிக்கதை பேசி ஒப்பேத்தினால் மக்கள் மன்னித்து விடுவார்களா?

Update: 2021-03-28 04:36 GMT

திமுக தலைவர் ஸ்டாலின் தனது கட்சியினர் கவனத்துடன் பேச வேண்டும் என்றும், கண்ணியக் குறைவான பேச்சை திமுக ஏற்காது என்று மேம்போக்காக கூறிவிட்டு, கடைசி வரியில் ராசாவை காப்பாற்ற சப்பை கட்டு கட்டும் கருத்தை வெளியிட்டு, தனது கட்சியின் தராதரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

திமுக கொள்கை பரப்புச் செயலாளர் லியோனி பெண்கள் உடல்வாகு குறித்துப் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் பலராலும் விமர்சிக்கப்பட்டது. அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி அரசியலில் வளர்ந்த விதத்தை ஒப்பிடும் விதத்தில் பேசுகிறேன் என ஆ.ராசா பேசிய வார்த்தைகள் பலத்த சர்ச்சையை உண்டாக்கின.

இதனை கண்டித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்களும், அரசியலுக்கு அப்பாற்பட்டும் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், பிரச்சாரத்தில் ஈடுபடும்போது கட்சியினர் உணர்ச்சிவசப்பட்டு, கண்ணியக் குறைவான சொற்களை வெளிப்படுத்திடக் கூடாது. அப்படிப்பட்ட சொற்கள் உதிர்த்திடுவதைக் கண்டிப்பாகத் தவிர்த்திட வேண்டும் என்பதையும், அத்தகைய பேச்சுகளைக் கட்சித் தலைமை ஒருபோதும் ஏற்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என ஆரம்பித்தில் கூறிவிட்டு, இதற்கடுத்த வரியில் ராசா பேசியது நியாயம் போல சித்தரித்துள்ளார்.

அதாவது, திமுக கூட்டணியின் வெற்றி உறுதியாகவும் வலிமையாகவும் மக்களால் தீர்மானிக்கப்பட்டுவிட்ட நிலையில், கட்சியினரின் பேச்சுகளைத் திரித்து, வெட்டி - ஒட்டி, தவறான பொருள்படும்படி செய்து வெற்றியைத் தடுக்க நினைத்து மூக்குடைபட்டவர்கள், இப்போதும் தோல்வி பயத்தால் மீண்டும் அதே பாணியை மேற்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களது எண்ணம் ஈடேறாத வகையில், கவனத்துடன் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் எனக் கட்சியினரைக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி, ராசா பேசியது எடிட் செய்து வெளியிட்டது போல, ஸ்டாலினும் கூறியுள்ளார். 

அநாகரிகமான பேச்சுக்கு திமுக தலைமை கண்டிக்கவில்லை என்கிற கருத்து பரவலாக எழுந்த நிலையில், சும்மா சாக்கு போக்க சொல்ல ஒரு அறிக்கை தேவை தானா? என்றே கேள்வி எழுந்துள்ளது. 

Similar News