இந்தியாவில் கொரோனா பாதித்த 82 லட்சம் பேர் எப்படி இருக்காங்க தெரியுமா.?

இந்தியாவில் கொரோனா பாதித்த 82 லட்சம் பேர் எப்படி இருக்காங்க தெரியுமா.?

Update: 2020-11-15 18:42 GMT

இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 82 லட்சத்தை கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது 41,100 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88,14,579 ஆக உயர்ந்துள்ளது. 4,79,216 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று 447 பேர் இறந்ததை தொடர்ந்து, இறந்தவர்களின் எண்ணிக்கை 1,29,635 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 42,156 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 82,05,728 ஆக அதிகரித்துள்ளது. அனைவரும் தற்போது நலமுடன் உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள.

மேலும், நாடு முழுவதும் நேற்று மட்டும் 8.05 லட்சம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. இதனையடுத்து, இதுவரை பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்ட கொரோனா மாதிரிகள் எண்ணிக்கை 12.48 கோடியை தாண்டியது.

Similar News