விவசாயிகளுக்கு அறுவடைக்கு பிந்தைய தீர்வளிக்க மைக்ரோசாப்ட்டுடன் மத்திய அரசு ஒப்பந்தம்!

Update: 2021-04-18 05:03 GMT

விவசாயிகளின் முழு பண்ணை துறை செயல்திறன் வெளிகொண்ர்தல், உற்பத்தியை மேம்பாடு மற்றும் அறுவடைக்கு பிந்தைய தீர்வினை வழங்கவும் மைக்ரோசாப்ட்டுடன் இணைந்துள்ளது மத்திய மோடி அரசு. அரசாங்கம் தொழில்நுட்பத்தின் முதன்மையாக உள்ள மைக்ரோசாப்ட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.


இதன் நோக்கமானது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே என்று அவர் குறிப்பிட்டார். விவசாயிகளுக்கு டிஜிட்டல் சுற்றுச்சூழலை உருவாக்க அரசாங்கம் மேலும் டெக்னாலஜி பிளேயர்களுடன் கூட்டுச் சேரும் என்று குறிப்பிட்டது.

"முதலில். உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹரியானா, குஜராத் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைச் சுற்றியுள்ள 10 மாவட்டங்களில் இருக்கும் 100 கிராமங்களுடன் மைக்ரோசாப்ட் செயல்படும். இந்த நிறுவனமானது, அறுவடை விளைச்சல், வானிலை டேட்டா, சந்தை தேவை மற்றும் விலை குறித்த விவசாய டேட்டாக்களை கைப்பற்றி அதன் மூலம் விவசாயிகளுக்கு அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை தீர்வுகாண உதவி செய்யும்" என்று தோமர் தெரிவித்தார்.


ஒப்பந்தத்தின்(MoU) படி, மைக்ரோசாப்ட்டின் உள்ளூர் கூட்டாளியான கிராப்டேட்டா, தனிநபர் அல்லது விவசாய குழுக்கள் எதிர்கொள்ளும் குறித்த மாஸ்டர் டேட்டாபேஸ்ஸை உருவாக்கும். "அரசாங்கம் இதுவரை 50 மில்லியன் விவசாயிகள் மற்றும் அவர்களின் நில கணக்கு உள்ளிட்ட டேட்டாவை சரிபார்த்துள்ளது," என்று மூத்த வேளாண் துறை அமைச்சர் தெரிவித்தார்.

Source: எகனாமிக் டைம்ஸ்  

Similar News