பிரதமர் மோடி திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு இரண்டு மாதங்களுக்கு உணவு தானியங்கள் வழங்கத் திட்டம்!
வெள்ளிக்கிழமை அன்று பிரதமர் மோடியின் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் ஆன் யோஜனாவின் கீழ் மே மற்றும் ஜூன் மாதத்தில் ஏழை மக்களுக்கு உணவு தானியங்களை அரசாங்கம் வழங்கும் என்று அறிவித்துள்ளது.
இரண்டு மாதங்களுக்கு மக்களுக்கு, ஒரு மாதத்துக்கு ஒரு நபருக்கு ஐந்து கிலோ உணவு தானியங்களை 80 கோடி மக்களுக்குத் தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு கொரோனா ஏற்பட்டு ஊரடங்கு மேற்கொண்டபோதும் 80 கோடி மக்களுக்கு உணவு தானியங்களை வழங்கியதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
மேலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கத்தை நாடு எதிர்கொண்டிருக்கும் வேளையில் ஏழை மக்கள் ஊட்டச்சத்துடன் இருப்பது அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தியதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
தொற்று நோயின் பாதிப்பை எதிர்கொள்ளுவதற்கு இந்த திட்டத்தின் மூலம் 80 கோடி PDS பயனாளிகள் பயனடைவார்கள் என்று உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே என்று தெரிவித்தார். இந்த திட்டத்திற்காக இந்திய அரசாங்கம் 26,000 கோடிக்கு மேலாகச் செலவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
source: https://www.financialexpress.com/economy/govt-to-provide-free-food-grains-to-poor-under-pm-garib-kalyan-ann-yojana-in-may-june-officials/2238940/