ஆக்சிஜென் தொடர்பான உபகரணங்கள் மற்றும் தடுப்பூசி போன்றவற்றுக்குச் சுங்கவரி தள்ளுபடி!

Update: 2021-04-25 10:22 GMT

கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை எதிர்த்து இந்தியா போராடி வரும் நிலையில், அது தொடர்பாகச் சனிக்கிழமை அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடத்தப்பட்ட உயர்மட்ட கூட்டத்திற்குப் பிறகு, கொரோனா தடுப்பூசி மற்றும் ஆக்சிஜென் போன்றவற்றுக்கு இறக்குமதி சுங்கவரியை மூன்று மாதங்களுக்கு ரத்து செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த தள்ளுபடியில், நோயாளிகளுக்கு கொரோனா அல்லது வேறு நோய் தொடர்பாக வழங்கப்படும் ஜெனெரேட்டர்ஸ், சேமிப்பு தொட்டிகள் மற்றும் கான்செண்ட்ரேட்டர்ஸ் போன்றவற்றிற்கும் இந்த தள்ளுபடி அடங்கும். இது தொடர்பான சிக்கல்களைச் சரி செய்ய ஒரு நோடல் அதிகாரியையும் மையம் அமைத்துள்ளது. இதன் மூலம்,"இந்த பொருட்கள் அதிகளவில் கிடைக்கும் மற்றும் அதன் விலையும் குறைவாக இருக்கும்", என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது இரண்டு கொரோனா தடுப்பூசிகள் உள்ளன அது இரண்டும் உள்ளூரிலே தயாரிக்கப்படுகின்றது. உள்கட்டமைப்பு இல்லாதது குறித்து வரும் விமர்சனங்களை எதிர்கொள்ள கொரோனா தொடர்பாகப் பிரதமர் நடத்துவது மூன்றாவது கூட்டமாகும்.

வெள்ளிக்கிழமை அன்று ஆக்சிஜென் உற்பத்தியாளர்களின், தயாரிப்பு மற்றும் இறக்குமதி குறித்துச் சந்தித்துப் பேசினார். ஆக்சிஜென் தேவையானது கடந்த ஒரு மாதத்தில் ஏற்பட்ட தோற்று எண்ணிக்கை அதிகரிப்பால் ஏற்பட்டது. டெல்லியில், வெள்ளிக்கிழமை இரவு ஆக்சிஜென் தட்டுப்பாட்டால் 25 பேர் இறந்துள்ளனர்.


மத்திய அரசாங்கம் ஆக்சிஜென் உற்பத்தியை அதிகரிக்க மிகவும் போராடி வருகின்றது. மேலும் 50,000 மெட்ரிக் டன் ஆக்சிஜெனை இறக்குமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது.

source: https://www.ndtv.com/india-news/customs-duty-to-be-waived-off-on-vaccines-oxygen-related-equipment-amid-covid-crisis-2420944

Similar News