கொரோனா தொற்றையும் மீறி இந்தியப் பொருளாதாரம் நன்றாக உள்ளது - ரிசெர்வ் வங்கி!
திங்களன்று மாதாந்திர செய்திக் குறிப்பில் பேசிய மத்திய வங்கி(RBI) , தற்போது இந்தியாவில் தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொருளாதார நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளது மற்றும் தொற்றுநோயால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் பண அழுத்தங்கள் அபாயப்படுத்துகின்றது என்று தெரிவித்தது.
"கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகள் பாராட்டத்தக்க வகையில் உள்ளது என்பது குறிப்பிட தக்கத்து," என்று RBI தெரிவித்தது.
இந்தியாவில் தொடர்ந்து ஐந்தாவது நாளாகத் திங்கட்கிழமை அன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிதாகப் பாதித்தது 3.53,991 யை எட்டியது. இதனால் தொற்றைக் கட்டுப்படுத்த சில மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது, ஆனால் 2020 போல் கடுமையான நடவடிக்கைகள் ஏற்பட்டால் பண அழுத்தம் அதிகரிக்கும்.
இருப்பினும் கார்பொரேட் வருவாய், திறன் மேம்பாடு மற்றும் மின்சார நுகர்வு போன்றவற்றால் நிலையான வளர்ச்சி இருக்கும் இதனால் பொருளாதார மீட்சி தொடரும் என்று ரிசெர்வ் வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
வங்கி அமைப்பில் பலவித பணப் புழக்கத்தை உறுதி செய்து, இது அரசாங்கத்தின் பாரம்பரிய 12.06 டிரில்லியன் ரூபாய் சந்தை கடன் திட்டத்தைச் சுலபமாக செயல்படுத்த உதவும் என்று பத்திர சந்தைகளுக்குப் பல முறை ரிசெர்வ் வங்கி உறுதியளித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் 6 முதல் 6.25 சதவீதம் பரவலாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
source: https://economictimes.indiatimes.com/news/economy/indicators/indias-economy-holding-up-well-against-covid-19-surge-says-rbi/articleshow/82260375.cms