சமூகப் பாதுகாப்பு சலுகைகள் பெற அனைத்து தொழிலாளர்களுக்கும் ஆதார் கட்டாயம்!

Update: 2021-05-06 07:11 GMT

சமூகப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சலுகைகளை பெரும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஆதார் சான்றிதழ் கட்டாயம் என்று தொழில்துறை அமைச்சகம் புதன்கிழமை அன்று தெரிவித்தது.


அமர்வில் பேசிய தொழிலாளர் செயலாளர் அபூர்வ சந்திரா, "சட்டம் 142 கீழ் சமூகப் பாதுகாப்பு குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் சமூக நன்மைகளை பெரும் அனைத்து தொழிலாளர்களின் எண்களை சட்டப்பூர்வமாகப் பெற தொழில்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது," என்று தெரிவித்தார்.

அமைப்புசாரா தொழிலாளர்களின் ஆதார் எண்களைத் தேசிய தகவல் மையத்தால் தயாரிக்கப்படும் மற்றும் அது அடுத்த 2 முதல் 3 மாதங்களில் வெளியிடப்படும் என்று சந்திரா குறிப்பிட்டார். சட்டப்பிரிவு 142 கீழ் சமூக பாதுகாப்பு தொடர்பான குறியீடு2020 கீழ், சமூகப் பாதுகாப்பு சலுகைகளைப் பெற அனைத்து ஊழியர்களும் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களும் பதிவு செய்திருக்க வேண்டும்.

மேலும் சட்டம் 142 கீழ், "பணம், மருத்துவரீதியான சலுகைகளைப் பெற, நிதியைப் பெற அனைத்து தொழிலாளர்களும் ஆதார் கட்டாயம்," என்பதை உறுதி செய்கிறது. எனவே தற்போது மேலும் சலுகைகளைத் தொடர, அனைத்து தொழிலாளர்களின் தரவுகளையும் சேகரிக்கப்படும் என்று தொழில்துறை செயலாளர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையின் அடிப்படை நோக்கமானது, நன்மைகளை வீணாக்குவதைக் குறைப்பதே ஆகும். இந்த சமூகப் பாதுகாப்பு 2020 குறியீடானது, 2020 இல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நான்கு தொழிலாளர்கள் குறியீடுகளில் ஒன்றாகும்.


2020 இல் சர்வதேச தொழிலாளர் அமைப்பு(ILO) வெளியிட்ட அறிக்கையின் படி, தற்போது இந்தியாவில் 400 அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளனர்

source: https://www.moneycontrol.com/news/trends/aadhaar-mandatory-to-avail-benefits-under-social-security-code-says-labour-ministry-6858161.html

Similar News