சமூக உள்கட்டமைப்பு நிதி மற்றும் தொழில்நுப்ட பயன்பாடு குறித்த கருத்தரங்கை நடத்த நிதியமைச்சகம் முடிவு!

Update: 2021-05-13 02:18 GMT

சமூக உள்கட்டமைப்பு நிதி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்து கருத்தரங்கு ஏற்பாடு செய்ய நிதியமைச்சகம் மற்றும் NDB முடிவு செய்துள்ளது.


மேலும் இந்திய BRICS தலைமை 2021 கீழ் பொருளாதாரம் மற்றும் நிதி ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்த கருத்தரங்கு இருக்கும். இது இந்த ஆண்டு நடைபெறவுள்ள 13 BRICS மாநாட்டுக்கு முன்னர் நடத்தப்படவுள்ளது.

தற்போது இருக்கின்ற கொரோனா தொற்றுநோய், சமூக உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதன் முக்கியத்துவம் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்த முக்கியத்துவத்தையும் உறுதிசெய்துள்ளது என்று நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "குறிப்பாக BRICS நாடு உட்பட எதிர்கொள்ளும் சவால்கள் அனைவருக்கும் பொதுவானவை." என்றும் அது தெரிவித்தது.

இந்த கருத்தரங்கானது மே 13 யில் பொது மற்றும் தனியார்த் துறைகளில் உள்ள உயர்மட்ட பங்கேற்பாளர்களைக் கொண்டு நடைபெறவுள்ளது. மேலும்,இது 21 ஆம் நூற்றாண்டில் சமூக உள்கட்டமைப்பு நிதி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாட்டில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கவனம் செலுத்தவுள்ளது என்றும் அது தெரிவித்தது.


BRICS தலைமையிலான NDB 2014 யில் அமைக்கப்பட்டது. இதன் தலைமைச் செயலகம் சீனாவில் ஷாங்காயில் உள்ளது. 2015 யில் NDB செயல்படத் தொடங்கியது. மேலும் இந்தியாவில் இதுவரை 6,924 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 18 திட்டங்களுக்கு அனுமதியளித்துள்ளது.

source: https://economictimes.indiatimes.com/news/economy/finance/finmin-ndb-to-hold-seminar-on-importance-of-social-infra-financing-digital-tech-use/articleshow/82547730.cms

Similar News