கோவிட் பொருட்களுக்கான பொது கொள்முதல் விதிகளை எளிதாக்கியது மத்திய அரசாங்கம்!

Update: 2021-05-15 05:30 GMT

தற்போது கொரோனா தொற்றுக்கு எதிராக நாடு மிகப் பெரிய போராட்டத்தை நடத்தி வரும் நிலையில், கொரோனா சிகிச்சைக்குத் தொடர்பான பொருட்களை கொள்முதல் செய்யும் போது இருக்கும் உள்ளூர் உள்ளடக்கத்தைக் கொண்ட பொது கொள்முதல் விதிகளை தற்காலிகமாக நீக்குவதாக வெள்ளிக்கிழமை அன்று மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விலக்கு செப்டம்பர் 30 வரை இருக்கும் என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.




 "கொரோனா உலகளாவிய தொற்றைக் கட்டுப்படுத்த தேவையான பொருட்களைக் கொள்முதல் செய்வதற்காக, பொது கொள்முதல் உத்தரவு 2017 இல் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது," என்று அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காகவும், வருமானத்தை உயர்த்தவும் மற்றும் வேலைவாய்ப்பினை அதிகரிக்கவும் ஜூன் 15 2017 இல் பொது கொள்முதல்(இந்தியாவில் தயாரிக்கும் பொருட்கள்) உத்தரவு பிறப்பிக்கப்படுத்தது.



இந்த உத்தரவானது உள்ளூர் உள்ளடக்கத் தேவைகளை பொது கொள்முதல் நடவடிக்கைகளின் பங்கேற்பு மூலம் உற்பத்தியை ஊக்குவிக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.



source: https://economictimes.indiatimes.com/news/economy/policy/govt-eases-public-procurement-rules-for-covid-supplies/articleshow/82635208.cms

Similar News