ரெம்டெசிவிர் மருந்தின் உற்பத்தி மற்றும் ஒதுக்கீட்டில் உயர்வு!

Update: 2021-05-16 12:15 GMT

தற்போது கொரோனா தொற்று நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து போதுமான அளவில் கிடைக்கும் நோக்கில், அதன் உற்பத்தி மற்றும் ஒதுக்கீட்டை அதிகரிப்பு செய்துள்ளதாக மத்திய கெமிக்கல் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் சதானந்த கௌடா தனது டிவிட்டர் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிவித்தார்.


மொத்தமாக மாநிலங்களுக்கு மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 76 லட்ச ரெம்டெசிவிர் மருந்தை ஏப்ரல் 21 முதல் மே 23 2021 வரை ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அனைத்து மாநில மருந்தக அமைச்சகம், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்தில், மாநிலங்களுக்கு மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, மேலும் மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகத்தைச் சீராகக் கண்காணிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுவதாக இரசாயனம் மற்றும் உர அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


"மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மார்க்கெட்டிங் நிறுவனங்களில் தேவையான கொள்முதல் ஆணைகளை முன்வைக்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றது," என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

source: https://economictimes.indiatimes.com/news/india/substantial-increase-made-in-production-and-allocation-of-remdesivir-gowda/articleshow/82679370.cms?UTM_Source=Google_Newsstand&UTM_Campaign=RSS_Feed&UTM_Medium=Referral

Similar News