ஞாயிற்றுக்கிழமை அகில இந்தியக் கோழி வளர்ப்பு சங்கம்(AIPBA), உள்நாட்டுச் சந்தைகளில் அதிகரித்து வரும் விலங்குகள் தீவனங்களின் விலை குறித்து கவலையைத் தெரிவித்து, சோயாபீன் இறக்குமதிக்கான வரியைக் குறைத்தது ஐந்து மாதங்களுக்கு பூஜ்யமாகக் குறைக்கக் கோரிக்கை விடுத்தது. உலகம் மற்றும் நாடு முழுவதும் கோழி, கறவை மாடு மற்றும் பன்றிகளுக்கு சோயாபீன் உணவு பொதுவான புரத உணவாக உள்ளது.
மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கு எழுதிய கடிதத்தில், "சோயாபீன் பற்றாக்குறையால் அதிக விலைக்கு வழிவகுக்கிறது. இதற்கு ஒரே தீர்வு, இறக்குமதிக்கு விலையைக் குறைக்க வேண்டும்," என்று AIPBA தலைவர் பகதூர் அலி தெரிவித்திருந்தார்.
சோயாபீன் உணவின் விலை ஒரு ஆண்டில் இரட்டிப்பாகி ஒரு டன்கு 36,420 ரூபாயில் இருந்து 81,000 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் உலக சந்தையில், சோயாபீன் மற்றும் சோயாபீன் உணவின் விலை இந்திய விலைக்குப் பாதியாகவே உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் உடனடி தலையீட்டைக் கோரி, இந்தியாவின் அறுவடை தொடங்கும் வரை சோயாபீன் உணவு இறக்குமதி வரியைக் குறைக்குமாறு AIPBA தலைவர் கேட்டுக்கொண்டார். உலக சந்தைகளில் குறைந்தபட்ச ஆதரவின் விலையை விடக் குறைவாக இல்லை என்பதால், இது விவசாயிகள் விலையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் சோயாபீன் தயாரிப்பு மாநிலங்களில் சேகரிப்பை உறுதி செய்யுமாறும் சங்கம் கோரிக்கை விடுத்தது. இந்தியாவில் 98 சதவீதம் சோயாபீனை மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் உற்பத்தி செய்கின்றன.
"இது குறித்து உடனடியாக முடிவு எடுக்கப்படாவிட்டால் கால்நடை துறைகள் மற்றும் கால்நடை விவசாயிகள் மற்றொரு நிதி இழப்பைச் சந்திக்கக் கூடும். கொரோனா தொற்றின் முதல் அலையின் போதும் மற்றும் தொடர்ந்து ஊரடங்கு காரணமாக அதிக பாதிப்பைச் சந்தித்தது," என்று சங்கம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Source: Economic Times