கொரோனாவால் இழப்புகளை சந்தித்த துறைகளுக்கு சிறப்பு சலுகை - மத்திய அரசு அதிரடி!

Update: 2021-05-26 06:38 GMT

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு சலுகை அளிக்க மத்திய நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் கொரோனா இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக பரவியது. இதனால் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இதன் காரணமாக பல்வேறு துறைகளை தெரிந்தவர்கள் பொருளாதார ரீதியாக இழப்புகளை சந்தித்தனர். குறிப்பாக தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம் போன்ற பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிகள் இன்னமும் தளர்த்தப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு மத்திய அரசு சார்பாக பல்வேறு சலுகைகள் வழங்கி ஊக்கம் அளிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் கொரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு சலுகைகளை வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

குறிப்பாக சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், சுற்றுலாத்துறை, விமான போக்குவரத்து உள்ளிட்ட துறைகளுக்கு சலுகை வழங்கும் திட்டம் உள்ளதாகவும் அதற்கான ஆலோசனைகள் ஆரம்ப கட்ட நிலையில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் எப்போது அறிவிப்பு வெளியாகும் என்பது குறித்து மத்திய அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் விரைவில் இதற்கான செய்தி குறிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

கொரோனா இரண்டாவது அலையில் பெரிய இழப்புகளை சந்தித்து இருக்கும் துறைகளுக்கு ஊக்கம் அளிப்பதற்காக சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Similar News