வாழ்வாதாரத்தைத் தக்கவைக்க சிறு குறு தொழில் நிறுவனங்ளுக்கு வீட்டு விநியோகம் செய்ய அனுமதி?
செவ்வாய்க்கிழமை அன்று தொழில்துறை அமைச்சகமான FISME, கொரோனா தொற்று நெருக்கடியில் பாதிப்படைந்துள்ள இதுபோன்ற துறைகளுக்கு MSME-களின் தயாரிப்புகளை வீடு விநியோகம் செய்ய அனுமதிக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசாங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் 6.3 கோடி MSME நிறுவனங்களைக் கொண்டுள்ளது. இது நாட்டில் பொருளாதார முதுகெலும்பாக உள்ள நிலையில், தற்போதைய கொரோனா தொற்று இரண்டாம் அலை இந்த துறையைப் பாதிப்படையச் செய்துள்ளது.
"MSME களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய மற்றும் மாநில அரசாங்கம் இதற்கான வழிமுறைகளை வெளியிட வேண்டும்" என்று இந்திய சிறு, குறு நிறுவன கூட்டமைப்பு நிறுவனங்களின் அமைப்பு (FISME) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"இந்த நடவடிக்கை வேலைவாய்ப்பை உறுதி செய்து, பொருளாதார நடவடிக்கையை மேம்படுத்தும். மாநிலங்களுக்கு உள்ளே அல்லது வெளியே பொருட்களின் இயக்கத்திற்கு எந்த தடையும் இருக்காது. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு இ பாஸ் அல்லது சிறப்பு அனுமதி தேவை இருக்காது," என்று அது தெரிவித்தது.
மேலும் மாநிலங்களில் இ கமெர்ஸ் மூலம் டெலிவரி செய்பவர்களை முன்னணி தொழிலாளர்களாகக் கருத வேண்டும் மற்றும் அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று அது கூறியது.
"ஊரடங்கின் போது டெலிவரிக்கு அனுமதி வழங்குவது, அதற்கான தடைகளை நீக்குவது, டெலிவரி செய்யும் நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்குவது போன்றவை MSME களிக்குப் புத்துணர்ச்சியை அளிக்கும் சில வழிகள்," என்று அது தெரிவித்தது.
Source: Economic Times