தற்போது கொரோனா தொற்று காரணமாக ஆக்சிஜென் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், முன்னுரிமை தொழில் நிறுவனங்களுக்குத் திரவ ஆக்சிஜென் பயன்படுத்த அடுத்த இரண்டு மூன்று நாட்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்க வாய்ப்புள்ளது என்று அரசாங்க மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்று நோய் இரண்டாம் அலையில் மக்களுக்கு ஆக்சிஜென் கிடைக்க, ஏப்ரல் 25 முதல் மருத்துவம் தவிரப் பிற தேவைகளுக்கு ஆக்சிஜெனை பயன்படுத்தத் தடை விதித்தது மத்திய அரசு மற்றும் அதன் உற்பத்தியை அதிகரித்து மருத்துவ பயன்பாட்டிற்கு அதிகரிக்குமாறும் கேட்டுக்கொண்டது.
"ஆக்சிஜென் தேவை குறைந்து விட்டது, அதனால் அடுத்த இரண்டு மூன்று நாட்களில் தொழில் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு நீங்கலாம்," என்று அதிகாரி தெரிவித்தார்.
மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு மாநிலங்களுக்கு மருத்துவ ஆக்சிஜென் வழங்குவது மிகப்பெரிய சவால் என்று தெரிவித்தார்.
சாதாரண நாட்களில் தினசரி மருத்துவ ஆக்சிஜென் உற்பத்தி 900 மில்லியன் டன்னாக இருந்தது, ஆனால் தற்போது அது பத்து மடங்கு அதிகரித்து 9,500 மில்லியன் டன் ஆக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தினசரி பாதிப்பு எண்ணிக்கை 8.02 ஆகக் குறைந்தது, இது தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு 10 சதவீதத்துக்குக் குறைவாக உள்ளது. அதே நேரத்தில் வாராந்திர பாதிப்பு எண்ணிக்கை 9.36 சதவீதமாகக் குறைந்துள்ளது.
Source: Economic Times