தற்காலிகமாக சில தொழில் மற்றும் திட்டங்களுக்கு ஆக்சிஜென் வழங்க அனுமதி!

Update: 2021-06-01 08:43 GMT

கொரோனா தொற்றின் பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ள நிலையில், MSME, உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை, உள்கட்டமைப்பு திட்டங்கள் போன்றவற்றுக்கு தற்காலிகமாக ஆக்சிஜென் வழங்க ஆக்சிஜென் உற்பத்தி பிரிவுகளுக்கு அனுமதி அளித்துள்ளது.


இருப்பினும் இது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மருத்துவ ஆக்சிஜென் வழங்குவதையும் உறுதி செய்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்ட ஆக்சிஜென் பற்றாக்குறையால் ஏப்ரல் மாதத்தில் தொழில்துறை தேவைகளுக்கு ஆக்சிஜென் வழங்க மத்திய அரசாங்கம் அனுமதி மறுத்தது.

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்தும் கழகம்(DPIIT), உள்துறை அமைச்சகத்தின் விலக்கு அளிக்கப்பட்ட தொழில்கள் தவிரப் பிற தொழில்துறைகளுக்கு ஆக்சிஜென் விநியோகத்தைத் தொடங்க உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது.


இது தொடர்பாக உள்துறை அமைச்சக அலுவலகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், "தொழில்கள் மற்றும் திட்டங்களுக்கு போன்றவற்றுக்கு தற்காலிகமாக ஆக்சிஜென் பயன்படுத்த DPIIT அனுமதிக்கலாம்," என்று தெரிவித்திருந்தது.

source: https://economictimes.indiatimes.com/news/economy/policy/govt-permits-supply-of-liquid-oxygen-to-certain-industries-projects-on-temporary-basis/articleshow/83137680.cms

Similar News