ஜூலை முதல் பொருளாதாரம் வளர்ச்சி பெரும் - தலைமை பொருளாதார ஆலோசகர்..!

Update: 2021-06-04 04:12 GMT

தற்போது நாட்டில் எழுந்துள்ள கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாட்டின் பொருளாதார மீட்சியைப் பாதித்துள்ளது என்று தலைமை பொருளாதார ஆலோசகர் KV சுப்பிரமணியம் வியாழக்கிழமை அன்று தெரிவித்துள்ளார். மேலும் ஜூலை முதல் மீண்டும் பொருளாதார மீட்சி பெரும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.


"கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாட்டின் பொருளாதார மீட்சியைப் பாதித்துள்ளது. இது ஜூலை முதல் மீட்சியுடைய வாய்ப்புள்ளது. இருப்பினும் மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது மற்றும் இது நாடுமுழுவதும் தடுப்பூசி இயக்கத்தை விரைவு படுத்தவேண்டும்," என்று சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தற்போதைய தடுப்பூசி இயக்கத்தைப் பற்றிப் பேசிய அவர், "இந்தியாவில் டிசம்பர் மாதத்தில் அனைவர்க்கும் தடுப்பூசி செலுத்தப்படும். மூன்று ஷிபிட் ஆகத் தடுப்பூசி மக்களுக்குச் செலுத்தப்பட்டால் ஒரே நாளில் 1 கோடி மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படும். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் தெரிவித்தார்.

மேலும் கொரோனா தொற்றின் மூன்றாம் அலை குறித்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், இது தற்போது நடந்து வரும் தடுப்பூசி இயக்கத்தால் அதனின் தாக்கம் குறையும் என்று அவர் தெரிவித்தார். "எனவே அதிகமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்போது தொற்றின் தாக்கமும் குறையும்," என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் கொரோனா தொற்று நிதிப் பற்றாக்குறை இலக்கு மற்றும் முதலீடு இலக்கை பாதிக்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு யூனியன் பட்ஜெட்டின் போது, நிதிப் பற்றாக்குறையை 6.8 சதவீதமாக இலக்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மேலும் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் புதிய தொகுப்பு குறித்து அரசு அரசு யோசிக்கிறதா என்ற கேள்விக்கு, "கடந்த ஆண்டு பட்ஜெட்டுக்கு பிறகு தொற்று நோய் ஏற்பட்டதால் அதற்கான ஏற்பாடு எதுவும் இல்லை. இந்த ஆண்டு பட்ஜெட்டில் தொற்று ஏற்பாடு செய்யபட்டுள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான துறையில் உள்ள செலவினங்களும் பட்ஜெட்டில் உள்ளது."

"தற்போது இந்த கொரோனா தொற்றால், உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானங்களில் அதிக செலவை இந்தியா செய்யவில்லை. மேலும் நிலைமை முன்னேறும் போது, அரசு பட்ஜெட் செலவினங்களை மேற்கொள்ளும்," என்று கூறினார்.


நாட்டின் பங்குச் சந்தை குறித்துப் பேசிய அவர், இந்தியப் பொருளாதாரம் சிறப்பாகச் செயல்படுவதால் அதிக முதலீட்டாளர்களால் பங்குச் சந்தை மிக உயர்ந்த அளவில் உள்ளது என்று கூறினார்.

Source: எகனாமிக் டைம்ஸ்

Similar News